இலங்கையில் கடந்த ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தற்போது வரையிலும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், இலங்கையில் மீண்டுமொரு தாக்குதல் இடம்பெறும் நாள் வெகு தொலைவில் இல்லையென தாம் நம்புவதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனை த்தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஆணைக்குழுவால் எமக்கும் வழக்கு தொடரப் போவதாக அண்மையில் பிரதான பத்திரிகையொன்றில் செய்தி வௌியாகியிருந்தது.
எமது மக்கள் இவ்வாறான விடயங்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்பதை நாம் தொடர்ச்சியாக கூறி வந்தோம்.
அதே போன்று மீண்டும் இவ்வாறான வெடிப்புச் சம்பவமொன்று பதிவாகும் நாள் வெகு தொலைவில் இல்லை.
அடிப்படைவாத கருத்துக்களால் ஆயுதம் தரித்த குழுக்கள் இதுவரை செயலற்றதாக்கப்படவில்லை.
அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைதான பிரதான சூத்திரதாரிகள் இன்று வௌியில் இருக்கின்றனர் என மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, கல்முனையில் இரகசியமாக இயங்கி வந்த தீவிரவாத அமைப்பொன்று அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.