திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
ஏப்ரல் 6ம் திகதி தமிழகத்தில் சட்டமன்றத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் நேற்று 173 தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியலை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
இந்நிலையில் இன்று திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
திமுக தேர்தல் அறிக்கையில் 500-க்கும் மேற்பட்ட வாக்குறுவதிகள் இடம்பெற்றுள்ளன.
அதில் முக்கிய வாக்குறுதிகளாக, திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசிடம் வலியுறுத்துவோம். அதிமுக அமைச்சர்கள் மீதான புகாரை விசாரிக்க தனி நீதிமன்றம்
பொங்கல் திருநாள் மாபெரும் பண்பாட்டு திருநாளாக மாநிலம் முழுவதும் நடத்தப்படும். கொரோனா நிவாரணத் தொகையாக ரூ.4,000 வழங்கப்படும்.
மாதம் ஒருமுறை மின்கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்துப்படும். பணியின் போது உயிரிழக்கும் காவலர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி வழங்கப்படும்.
குடிசை இல்லாத மாநிலமாக தமிழகம் மாற்றப்படும். சென்னை உள்ளிட்ட நகரங்களில் குழாய் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படும். பெட்ரோல் ரூ.5, டீசல் ரூ.4 குறைக்கப்படும்.
அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 40 சதவீத ஒதுக்கீடு.தமிழகத்தில் 75% வேலை வாய்ப்பை தமிழர்களுக்கு தர சட்டம் நிறைவேற்றப்படும்.30 வயதுக்குட்பட்டவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும்.ஆவின் பால் விலை குறைக்கப்படும்.
எட்டாம் வகுப்பு வரை தமிழ் கட்டாயம் ஆக்க நடவடிக்கை எடுக்கப்படும்.பள்ளி மாணவர்களுக்கு காலையில் ஊட்டச்சத்தாக பால் வழங்கப்படும்.
தேர்தல் களத்தின் கதாநாயகனாம் திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு – நேரலை https://t.co/zkhxAbzkg4
— M.K.Stalin (@mkstalin) March 13, 2021