ருமேனியா நாட்டில் ஞானஸ்தானம் கொடுக்கும் நிகழ்ச்சியில் குழந்தை பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிறிஸ்தவ மதத்தில் பிறந்த குழந்தைகளுக்கு சில வாரங்கள் கழித்து ஞானஸ்தானம் கொடுக்கப்படுவது வழக்கம். அப்படியான ஒரு நிகழ்ச்சி ருமேனியா நாட்டில் உள்ள தேவாலயம் ஒன்றில் குழந்தைக்கு நடந்தது. அந்நிகழ்ச்சியில் குழந்தையை பாதிரியார் தண்ணீரில் 3 முறை அமிழ்த்தி எடுத்துள்ளார்.
இதனையடுத்து சில மணி நேரத்தில் குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தது. மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் நுரையீரலில் தண்ணீர் இருந்ததையும், தண்ணீருக்குள் மூழ்கடிக்கப்பட்ட குழந்தைக்கு அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டதையும் உறுதி செய்தனர்.
இதனையடுத்து தேவாலய பாதிரியார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. ருமேனியா நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக இதுபோன்ற சம்பவங்களால் அதிகளவில் நடைபெற்றதாகவும், இதனால் ஞானஸ்தானம் நடைமுறைகளை மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது