தமிழக மாவட்டம் தர்மபுரியில் சொத்து தகராறில் பெற்ற தாய் தந்தையை மகன் அடித்தே கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தகியுள்ளது.தருமபுரி மாவட்டம் பூச்செட்டிஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (66), மற்றும் அவரது மனைவி சின்னராஜி (60).இவர்களுக்கு ராமசாமி (40) என்ற மகன் மற்றும் சுமதி (35) என்ற மகள் உள்ளனர்.
சொந்த கிராமத்திலேயே மெக்கானிக் கடை நடத்திவரும் ராமசாமி திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருகிறார். அதே போல் சுமதிக்கும் திருமணம் ஆகி குடும்பத்துடன் வசித்துவருகிறார்.இந்த நிலையில், தாய் சின்னராஜின் பெயரில் பி.அக்ரஹாரம் பகுதியில் இருந்த ஒரு வீட்டுமனையை சரிபாதியாக பிரித்து மகனுக்கும் மக்களுக்கும் ராமச்சந்திரன்-சின்னராஜி தம்பதியினர் வழங்கியுள்ளனர்.
அந்த நிலத்தில் சுமதி கடைகளுக்கான கட்டிடத்தை கட்டிவந்துள்ளார். அதேபோல் ராமசாமியும் கடை கட்டி வாடகை விட ஆசைப்பட்டுள்ளார்.ஆனால், தன்னிடம் பணம் இல்லாததால், பெற்றோர்களிடம் ஒரு பெருந்தொகை தொடர்ந்து கேட்டுவந்துள்ளார்.இதில் ராமசாமிக்கும் அவரது பெற்றோருக்கும் இடையில் பல நாட்களாக பிரச்சினை நடந்துள்ளது.
இந்நிலையில், நேரு இரவும் இந்த விவகாரம் தொடர்பாக ராமசாமிக்கும் பெற்றோருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.அப்போது, கோபத்தில் கொடூரனாக மாறிய ராமசாமி, வீட்டில் இருந்த பெரிய இரும்பு கம்பியை எடுத்து தாய் சின்னராஜியின் தலையில் வேகமாக தாக்கியுள்ளார். அதை தடுக்க வந்த ராமச்சந்திரனையும் அவர் அதே கம்பியைக் கொண்டு ஓங்கி தலையில் அடித்துள்ளார்.
விஷயம் அறிந்த அக்கம்பக்கத்தினர், ரத்தவெள்ளத்தில் கிடந்த இருவரையும் காப்பாற்ற ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் அவசர ஊர்தி வருவதற்கு முன்னரே இருவரும் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸ் வழக்குப்பதிவு செய்து உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இரண்டு கொலைகளைச் செய்த ராமசாமி சமத்துவ இடத்திலிருந்து தப்பி ஓடிய நிலையில், பின்னர் நேற்று நள்ளிரவில் பொலிஸில் சரணடைந்தார்.சொத்து தகராறில் பெற்ற தாய் தந்தையை மகன் அடித்தே கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.