Author: Editor

யாழ்ப்பாணத்தில் வாயில் வாள் ஒன்றினை வைத்து டிக்டொக் (TikTok) காணொளி செய்து சமூக ஊடகங்களில் பதிவிட்ட இளைஞனை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். உரும்பிராய் சிவகுல வீதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். கைதுசெய்யப்பட்டவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.

Read More

தேசிய இரத்த மத்திய நிலையத்தின் வேண்டுகோளுக்கு அமைய யாழ். மாவட்ட மின்னியலாளர்களின் ஏற்பாட்டில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் யாழ் மாவட்ட லயன்ஸ் கழகம் ஆகியன இணைந்து இரத்ததான முகாமொன்றை யாழ்.மாவட்டத்தில் நடத்தவுள்ளது. யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் ஜூலை மாதம் முதலாம் திகதி காலை 8 மணி முதல் நடைபெறவுள்ளது. யாழ்.மாவட்ட மக்கள் உயிர்க்காக்கும் இரத்ததான நிகழ்வில் பங்குபற்றுமாறு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் யாழ் மாவட்ட லயன்ஸ் கழகம் ஆகியன இணைந்து அழைப்பு விடுத்துள்ளன. தற்போது நாட்டில் நிலவும் பயணதடை காரணமாக இந்த இரத்ததான நிகழ்வில் கலந்துக்கொள்ள விரும்புவோர் கீழுள்ள தொலைபேசி இலக்கத்துடன் (077 039 9119) முன்கூட்டியே தொடர்பு கொள்ளும் பட்சத்தில் அதற்கான ஏற்பாடுகளை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் யாழ் மாவட்ட லயன்ஸ் கழகம் ஆகியன மேற்கொள்ளும் என அதன் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

Read More

வவுனியா சாந்தசோலை பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த சுகாதார பரிசோதகர் ஒருவர் தாக்குதலுக்குள்ளாகிய நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சுகாதார பரிசோதகர் நேற்றையதினம் மாலை சாந்தசோலை பகுதியில் கடமை நிமிர்த்தம் சென்றிருந்தார். இதன்போது முகக்கவசத்தை சீரான முறையில் அணியாமல் வீதியால் இளைஞர் ஒருவர் சென்றுள்ளார். இதன்போது அதனை சீராக அணியுமாறு சுகாதார பரிசோதகர் எச்சரித்துள்ளார். இதனால் கோபமடைந்த இளைஞர் சுகாதார பரிசோதகரை தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் காயமடைந்துள்ளதாக தெரிவித்து சுகாதார பரிசோதகர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் தாக்கியதாக சந்தேகிக்கும் நபரை தேடி வருகின்றனர்.

Read More

இலங்கை கடற்பரப்பில் கடந்த வாரம் தீபற்றிய கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆபத்தான பொருட்கள் என சந்தேகிக்கப்படும் சில பொருட்கள் மன்னார் வங்காலை கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ளதாக வங்காலை மீனவர்கள் தெரிவித்துள்ளனர். வங்காலை பொலிஸ் நிலைத்திற்கு அருகில் உள்ள கடற்பரப்பிலேயே இன்று காலை சிறிய பிளாஸ்ரிக் உருண்டைகள் என சந்தேகிக்கப்படும் பொருட்கள் ஒதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். சிறிய உருண்டைகள் கடல் கரையேரங்கள் முழுவதிலும் சிதறிக்கிடப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளதுடன் அப்பகுதிக்கு பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனை அதிகாரிகள் சென்று கரை ஒதுங்கியுள்ள பிளாஸ்ரி பொருட்கள் தொடர்பாக பார்வையிட்டு வருகின்றனர்.

Read More

பொதுஜன முன்னணியின் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுக்கு கொரோனாத் தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதாரத் தரப்புக்கள் தெரிவித்துள்ளன. கொழும்பில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவத்தை அடுத்து அவரும் அவருக்கு நெருக்கமானவர்களும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை, இன்று பிசிஆர் பரிசோனையும் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Read More

மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்துக்கு அண்மையாக துவிச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவரை கொவிட்-19 நோய்த்தொற்றாளர்களை ஏற்றி வந்த பேருந்து மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார். விவசாயி ஒருவரே உயிரிழந்த நிலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களால் பேருந்துக்கு கற்கள் எறியப்பட்டன. அதனால் பேருந்தில் பாதுகாப்புக்கு பயணித்த இராணுவம் கற்கள் எறிந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முற்பட்டதால் குழப்பநிலை ஏற்பட்டது. இந்தச் சம்பவம் இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றது. மட்டுவில் சந்திரபுரன் வட்டன் வேலாயுதம் (வயது-70) உயிரிழந்துள்ளார். தென்னிலங்கையிலிருந்து 5 பேருந்துகளில் கோவிட்-19 நோய்த்தொற்றாளர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்துக்கு அண்மையாக துவிச்சக்கர வண்டியில் பயணித்த விவசாயி ஒருவரை பேருந்து ஒன்று மோதியதில் அவர் வீதியில் சாய்ந்தார். சுயநினைவற்ற அவர் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்த நிலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களால் பேருந்துகளுக்கு கற்கள் எறியப்பட்டன. அதனால் பேருந்துகளில் பாதுகாப்புக்காகப் பயணித்த இராணுவத்தினர்…

Read More

பயணத்தடை அமுலில் உள்ள போது , அதனை மீறி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்கள் , குழந்தையை தொட்டிலில் ஈடுபடும் நிகழ்வு நடத்தியவர்கள் மற்றும் ஆலயத்தில் பொங்கல் வழிபாட்டில் ஈடுபட்டவர்கள் என சுமார் 15 பேருக்கு மேல் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நிகழ்வில் கலந்து கொண்ட ஏனையவர்களை இனம் கண்டு அவர்களையும் தனிமைப்படுத்த சுகாதார பிரிவினர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். பருத்தித்துறையில் நடைபெற்ற இச் சம்பவங்கள் குறித்து மேலும் தெரியவருவதாவது , கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் இருவர் தமது 50ஆவது பிறந்தநாளை கொண்டாடி உள்ளனர். பயண தடைகளை மீறி அயலவர்கள், உறவினர்கள் என பலர் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர். இது குறித்து சுகாதார பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் பிறந்தநாள் கொண்டாடிய இருவர் குடும்பங்கள் உள்ளிட்ட நிகழ்வில் கலந்து கொண்டவர்களில் அடையாளம் காணப்பட்ட சிலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் குறித்த பகுதியில் குழந்தை பிறந்து 31ஆவது நிகழ்வும் , குழந்தையை தொட்டிலில்…

Read More

மேஷம்: உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். பழைய பிரச்னைகள் தீரும். ஆடை ஆபரணம் சேரும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய பாதைதெரியும் நாள். ரிஷபம் ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். சிலரின் தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக்கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள். மிதுனம் மிதுனம்: விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். கணவன்-மனைவிக்குள் கருத்துவேறுபாடுகள் வந்து நீங்கும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேசவேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் விவாதம் வரக்கூடும். அதிகம் உழைக்க வேண்டியநாள். கடகம் கடகம்: பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும். புதிய கோணத்தில்…

Read More

17 வயதுடைய சிறுவன் ஒருவன் தனது தந்தையை கத்தியால் தாக்கி படுகொலை செய்துள்ளான். இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஜொந்தாமினர், சம்பவம் குறித்து தெரிவிக்கையில், இச்சம்பவம் Ploeren, (Morbihan) எனும் சிறு நகரில் இடம்பெற்றுள்ளதாகவும், 17 வயதுடைய குறித்த சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். சனிக்கிழமை, ஜூன் 5 ஆம் திகதி இரவு 11.30 மணி அளவில் 17 வயதுடைய சிறுவன் ஒருவன் ஜொந்தாமினருக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டுள்ளான். தனது தந்தையை அவன் கொலை செய்துவிட்டதாக அவர்களிடம் தெரிவித்துள்ளான். அதை அடுத்து ஜொந்தாமினர் குறிப்பிட்ட இடத்துக்கு விரைந்து சென்றுள்ளனர். அங்கு 46 வயதுடைய தந்தை சடலமாக கிடக்க, அவரது 17 வயதுடைய மகன் ஜொந்தாமினருக்காக காத்திருந்துள்ளான். அன்றைய இரவு மிக கடுமையாக குடித்திருந்தான் எனவும், தந்தை தம்மை திட்டியதாகவும், பின்னர் அவர் உறங்கிக்கொண்டிருக்கும் போது இரண்டு கத்திகளை எடுத்துக்கொண்டு சென்று அவரை குத்தி கொன்றதாகவும் அவன் வாக்குமூலம் அளித்துள்ளான். ஜொந்தாமினர் உடனடியாக…

Read More

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பயணத்தடை காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த கடலுணவு வியாபாரி ஒருவர், வாகன குத்தகைக் கட்டணத்தை செலுத்த முடியாமல் நிதி நிறுவன உத்தியோகத்தர்களின் நெருக்கடி காரணமாக தனது உயிரை மாய்த்துள்ளார். வடமராட்சி கிழக்கு உடுத்துறை – ஆழியவளையைச் சேர்ந்த சிவலிங்கம் சிவதரன் (வயது-34) என்ற 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு நேற்று (06) தவறான முடிவை எடுத்து உயிரை மாய்த்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். “கடலுணவுகளை கொள்முதல் செய்து விற்பனை செய்து வரும் அவர், நிதி நிறுவனம் ஒன்றில் குத்தகைக் கட்டணத்தில் வாகனத்தை வாங்கியுள்ளார். தற்போது நாட்டில் நடைமுறையில் உள்ள பயணத்தடை காரணமாக அவரது தொழிலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. எனினும் மாதாந்தக் கட்டணத்தைச் செலுத்துமாறு நிதி நிறுவனம் அவரிடம் கோரியுள்ளது. அத்துடன், அந்த நிறுவனத்தின் அலுவலகர்கள் அவரிடம் சென்று பணத்தைக் கோரியுள்ளனர். தன்னிடம் 35 ஆயிரம் ரூபாய்தான் தற்போது உள்ளது. மிகுதியை கிடைத்தவுடன் செலுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும்…

Read More