Author: Editor

யாழ்.பல்கலைக்கழகம், யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடங்களில் நேற்று(07) மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த ஒரு வயதுக்கு உட்பட்ட இரண்டு குழந்தைகள் உட்பட்ட 80 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் 276 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகளில் யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 59 தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன் அடிப்படையில், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 27 (01 வயதுக்கு உட்பட்ட இரண்டு ஆண் குழந்தைகள், 04, 08, 09 வயதுகளை உடைய சிறுவர்கள், 16 வயதுடைய சிறுமியும் உள்ளடக்கம்) உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 17 (03 வயதுடைய சிறுமியும் உள்ளடக்கம்) யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 07 (14 வயதுடைய சிறுவனும் உள்ளடக்கம்) கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 08 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். யாழ்.போதனா வைத்தியசாலையில் 604 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் யாழ்.குடாநாட்டினைச் சேர்ந்த…

Read More

மேஷம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். முகப்பொலிவு கூடும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய மாற்றங்கள் ஏற்படும் நாள். ரிஷபம் ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள். மிதுனம் மிதுனம்: திட்டமிட்ட காரியங்களை அலைந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளுங்கள். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம் வரும். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிக்க வேண்டி வரும். அதிகம் உழைக்க வேண்டிய நாள். கடகம் கடகம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஆதரவு கிட்டும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள்…

Read More

புதியதாக மடிக்கக்கூடிய விதத்தில் ஸ்மார்ட்போனிற்கான காப்புரிமை பெற சாம்சங் நிறுவனம் சர்வதேச காப்புரிமை அலுவலகத்தில் தற்போது விண்ணப்பித்துள்ளது. இவ் விண்ணப்பம் நவம்பர் 2020 வாக்கில் சமர்பிக்கப்பட்டது. இது ஜூன் 3, 2021 அன்று அச்சிடப்பட்டது. காப்புரிமையில் இடம்பெற்று இருக்கும் படங்கள் மற்றும் ஸ்மார்ட்போனின் மடிக்கும் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஹின்ஜ் டிசைன் கேலக்ஸி இசட் போல்டு 2 மாடலை போன்றே காட்சியளிக்கிறது. இவ் ஸ்மார்ட்போன் மூன்று விதங்களில் மடிக்கும் வகையில் உருவாக்கப்படும் என்று கூறப்படுகிறது. முன்புறம் பன்ச் ஹோல் கட்-அவுட், மிக மெல்லிய பெசல்களை கொண்டிருக்கிறதாம். சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பின்புறம் இரண்டு வெவ்வேறு ஹின்ஜ்கள் இடம்பெற்றுள்ளன. பேக் பேனலில் மூன்று கேமரா சென்சார்கள், செங்குத்தாக பொருத்தப்படுகின்றன. புதிய ஸ்மார்ட்போனின் இரண்டாவது ஹின்ஜ் கேமரா லென்ஸ்களை கொண்டிருக்கிறது. இந்த வகையில் ஸ்மார்ட்போன் முழுமையாக மடிக்கப்பட்ட நிலையில், இவை செல்பி கேமராக்களாக பயன்படுத்தக்கூடியதாகவும் இருக்கும். வலதுபுற ஸ்கிரீன் நடுப்புறமாக மடிக்கக்கூடியதாக இருக்கிறது. இடதுபுற ஸ்கிரீன்…

Read More

இளம் பெண் ஒருவரை கடத்தி அவரது தலையை மொட்டை அடித்து, பாலியல் பலாத்கார மிரட்டல் விடுத்த ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் கடந்த திங்கட்கிழமை Rennes (Ille-et-Vilaine) நகரில் இடம்பெற்றுள்ளது. 17 வயதுடைய இளம் பெண் ஒருவர் கடத்தப்பட்டு, தாக்கப்பட்டுள்ளார். பின்னர் அவரது தலைமுடியை முற்றாக மொட்டை அடித்து, பாலியல் பலாத்கார அச்சுறுத்தலும் விடுத்துள்ளனர். காவல்துறையினர் மிக வேகமாக செயற்பட்டு, கடத்தலில் ஈடுபட்ட அனைவரையும் அடையாளம் கண்டுகொண்டுள்ளனர். இச்செயலில் 19, 23, 27, 31 வயதுடைய ஆகிய நான்கு பெண்களும், 20, 21 வயதுடைய இரு ஆண்களும் இணைந்து ஈடுபட்டுள்ளனர். திங்கட்கிழமை மாலை அப்பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் தனித்திருந்த குறித்த இளம் பெண்ணையே இவர்கள் கடத்தியுள்ளனர். பின்னர் அவரை வாகனம் ஒன்றில் ஏற்றி அதற்குள் வைத்தே தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். அவரது ஆடைகளை களைய முற்பட்டுள்ளனர். பின்னர் வலுக்கட்டாயமாக அவர் பிடிக்கப்பட்டு அவரது தலை மொட்டை அடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான…

Read More

செடியாகவும் மரமாகவும் இருக்கும் இது மூலிகை குணங்கள் நிறைந்தது. இவை எங்கு நிறைந்திருக்கிறதோ அங்கு ஆக்ஸிஜன் அளவு அதிகமாக இருக்கும். அதனால் தான் ஆடாதோடை ஆயுள் மூலிகை என்று அழைக்கப்படுகிறது. உடல் சோர்வு, தசை பிடிப்பு, வலி போன்றவை நீங்க ஆடாதோடை இலையை பறித்து கஷாயமாக்கி குடிப்பார்கள். அது மட்டுமல்லாமல் ஆடாதோடை நுரையீரலில் இருக்கும் சளியை வெளியேற்றி நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துகொள்ள உதவும். சிறு குழந்தைகளுக்கு அவ்வபோது சளி வந்தால் ஆடாதோடை இலையை உலரவைத்து பொடித்து வைத்துகொள்ள வேண்டும். அரைடீஸ்பூன் தேனில் கால் டீஸ்பூன் அளவு ஆடாதோடை பொடியை குழைத்து நாக்கில் தடவ வேண்டும். இதனால் நுரையீரல் ஆரோக்கியமாக பலமாக இருக்கும். ஆடாதோடையை கஷாயமாகவோ, சிரப் ஆகவோ சேர்த்துக் கொண்டால் நல்ல குரல் வளம் பெறுவதோடு தங்கள் தொண்டையை கிருமித் தொற்று ஏற்படாமல் காத்துக் கொள்ளலாம். ஆடா தோடை இலையைப் பயன்படுத்தும் முறை ஆடாதோடை குடிநீர் தயாரித்து அருந்தி வர தொண்டைக்…

Read More

போக்குவரத்துத் தடை காரணமாக கிளிநொச்சி பரந்தன் பஸ் தரிப்பு நிலையத்தில் வயது முதிர்ந்த அம்மா ஒருவர் சுமார் பத்து நாட்களாக பஸ் நிலையத்தில் தங்கி வாழ்கின்றார்.கரைச்சி பிரதேச செயலாளரை மேற்கோள் காட்டி சமூக வலைத்தளங்களில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வயது முதிர்ந்த அம்மா யார் என வினவியபோது தான் யாழ்ப்பாணம் காங்கேசன் துறையிலிருந்து கருவாடு விற்பனைக்காக கிளிநொச்சி வந்தபோது போக்குவரத்து தடை செய்யப்பட்ட காரணத்தினால் என்னால் செல்ல முடியவில்லை என்று தெரிவித்தார். அந்த வயது முதிர்ந்த அம்மா தன்னை காங்கேசன்துறையில் அனுப்பி வையுங்கள் என்று சொல்லாமல் தன்னை கைதடியில் உள்ள முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுங்கள் என்று கூறினார். இது தொடர்பாக மேலும் அம்மாவிடம் வினவியபோது ஏன் அம்மா உங்களுக்கு யாரும் இல்லையா காங்கேசன்துறையில் எனக்கு மகனும் மருமகளும் இருக்கின்றன அவர்கள் என்னை சரியாக கவனிப்பதில்லை என கண்கலங்கியபடி கூறினார்..

Read More

வரலாற்று பிரசித்தி பெற்ற நயினாதீவு நாகபூஷணி ஆலய இராஜ கோபுரத்தில் இன்று நண்பகல் நாகம் ஒன்று காட்சி கொடுத்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. நயினாதீவு நாகபூஷணி அம்பிகையின் திருவிழா எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் பக்கதர்கள் திருவிழா நடக்குமா? நடக்காதா? என்ற குழப்பத்தில் உள்ளனர். இந்த நிலையில் நாகம் காட்சி கொடுத்தமையனது நயினை அம்பாள் பக்தர்களை பரவசப்படுத்தியுள்ளது.

Read More

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 40 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார் என்று அரச தகவல் திணைக்களம் இன்றிரவு அறிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,696 ஆக உயர்வடைந்துள்ளது.

Read More

மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் திடீர் திடீரென்று எதையோ இழந்ததை போல் இருப்பீர்கள் . சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் பணிவாகப் பேசி வேலை வாங்குங்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நாள். ரிஷபம் ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்க பாருங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியை அனுசரித்து போங்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள். மிதுனம் மிதுனம்: எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் புகழ்பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். சிறப்பான நாள். கடகம் கடகம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். உறவினர் நண்பர்களின் வருகையால் உற்சாகம் அடைவீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு…

Read More

கொரோனா வைரஸ் தொற்று மக்களை அவர்களின் உடல்நலம் குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருப்பவர்களாக மாற்றியுள்ளது. ஆரோக்கியமாக சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்வது , சமூக இடைவெளியை கடைபிடிப்பது என நமது ஆரோக்கியத்தை நல்ல நிலையில் வைத்திருக்க அனைத்து முக்கியமான சுகாதார நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். நாம் எடுத்துக்கொள்ளும் அனைத்து பொருட்களிலும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். சந்தையில் எண்ணற்ற பொருட்கள் கிடைப்பதால் அவற்றில் போலியானது எது உண்மையானது எது என்று தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது. குறிப்பாக மருந்து பொருட்களில் போலி மருந்துகள் ஸ்டெராய்டுகள், தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் மற்றும் போலி பொருட்கள் போன்ற தடைசெய்யப்பட்ட பொருட்களைக் கொண்டிருக்கின்றன, ஆனால் அசல் சப்ளிமெண்ட்ஸைப் போலவே தோன்றும். போலி மருந்துகள் போலி மருந்துகளை உட்கொள்வது உங்கள் உடலுக்கு நிரந்தர சேதத்தை ஏற்படுத்தும். கடந்த சில தசாப்தங்களாக மருந்துகளுக்கான தேவை அதிகரித்துள்ளதால், உண்மையான மற்றும் போலி சப்ளிமெண்ட்ஸ் செழித்துள்ளன. உண்மையான மற்றும் போலி சப்ளிமெண்ட்ஸ்களை அடையாளம் காண…

Read More