Author: Editor

நாட்டில் 4 கட்டங்களாக வருகின்ற 29ஆம் திகதிமுதல் பாடசாலைகள் திறக்கப்படப் போவதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவிவருகின்றன. இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கப்பில பெரேரா அந்தத் தகவல்களை நிராகரித்துள்ளார். அத்துடன் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது பற்றிய திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். எவ்வாறாயினும் 7ஆம் திகதி வரை நாடு முழுவதிலும் அமுல்படுத்தப்பட்டிருக்கும் பயணக்கட்டுப்பாடுகள் எதிர்வரும் 14ஆம் திகதிவரை நீடிக்கப்படப் போவதாக உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளிவர முன் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன.

Read More

மாவனெல்ல, தெவனகல பிரதேசத்தில் மண்சரிவில் சிக்கி காணாமல்போயிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. குறித்த பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற மண்சரிவினால் வீடொன்றின்மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் தாய், தந்தை மற்றும் அவர்களின் 23 வயது மகள், 29 வயது மகன் என 4 பேர் மண்சரிவில் புதையுண்டு காணாமல்போயிருந்தனர். இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகளில் 23 வயதான மகளின் சடலம் முதலில் மீட்கப்பட்டது. பின்னர், தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகளையடுத்து தந்தை, தாய் ஆகியோரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. 57 வயதான தந்தை மற்றும் தாயின் சடலங்கேளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, மண்சரிவில் சிக்கி காணாமல்போன மகனை தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், இறுதியாக 29 வயது மகனின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக அனர்ந்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளமை…

Read More

மாதா, பிதா, குரு, தெய்வம் என பெற்றோருக்கும் மேல் குருவை வைத்திருக்கின்றனர். குரு – சிஷ்யன் உறவு என்பது மிகவும் புனிதமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. எனினும் அந்த குரு – சிஷ்யன் உறவை கொச்சைப்படுத்தும் வகையில் நடைபெற்று வரும் சம்பவங்கள் பெற்றோர்கள் மத்தியில் அதிவலைகளை ஏற்படுத்தியிருக்கின்றன. சமீப நாட்களாக மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்கள் குறித்தும், பயிற்சிக்கு வந்த பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பயிற்சியாளர்கள் குறித்தும் செய்திகள் வெளியாகி சமூகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பெண் வகுப்பாசிரியர் ஒருவர் தன்னிடம் படித்த மைனர் மாணவர் ஒருவருடன் மாயமாகியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஹரியானா மாநிலம் பானிபட்டைச் சேர்ந்த தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்த பெண் ஒருவர் தன்னுடைய வீட்டில் டியூஷனும் எடுத்து வந்துள்ளார். அவர் பணியாற்றி வந்த பள்ளியில் வகுப்பாசிரியாக இருக்கும் அவரிடம், பதினோராம் வகுப்பு மாணவர் ஒருவர் டியூஷன் படிப்பதற்காக தேஸ்ராஜ் காலணியில்…

Read More

மட்டக்களப்பு இருதயபுரம் பகுதியில் வைத்து கடந்த புதன்கிழமை 10.30 மணியளவில் கைது செய்யப்பட்ட 21 வயதுடைய சந்திரன் விதுஷன் எனும் இளைஞர் நேற்று வியாழக்கிழமை சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது, பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மரணமடைந்த இளைஞனின் தங்கை தனது அண்ணனை பொலிஸார் அடித்துக் கொன்றதை நான் என் கண் முன்னே பார்த்தேன் என்று பகிர் தகவலொன்றை தெரிவித்துள்ளார் . எனது அண்ணனுக்கு நீதி கிடைக்க வேண்டும் அதுவரைக்கு நான் சும்மா விடமாட்டன் தூக்கி போட்டு குத்தினார்கள் சுவரில் சாற்றி அடித்தார்கள் சுவர் உடைந்து போய் இருக்கு’இவர்க்ளுக்கு யார் அதிகாரம் கொடுத்தது .

Read More

நாட்டில் தற்போது நிலவும் மோசமான காலநிலையை தொடர்ந்தும் பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் (மேற்கு, சப்ரகமுவ, மத்திய மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களில்) மற்றும் வடமேற்கு மாகாணங்களில் நிலவும் மழையுடனான காலநிலை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் 100 மி.மீ.க்கு மேல் கனமான மழை பெய்யக்கூடும் எதிர்பார்க்கலாம். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Read More

கொலஸ்ட்ரால் என்பது முற்றிலும் மோசமானது அல்ல. இது கல்லீரலால் உற்பத்தி செய்யப்படும் ஒரு மெழுகு, கொழுப்பு போன்ற பொருள். இது சில முக்கியமான உடல் செயல்பாடுகளில் முக்கிய பங்கை வகிக்கிறது. இத்தகைய கொலஸ்ட்ரால் செல் சவ்வுகள், குறிப்பிட்ட ஹார்மோன்கள் மற்றும் வைட்டமின் டி உருவாக்கத்திற்கு உதவுகிறது. இந்த கொலஸ்ட்ராலில் இரண்டு வகைகள் உள்ளன. அவை HDL என்னும் நல்ல கொலஸ்ட்ரால் மற்றும் LDL என்னும் கெட்ட கொலஸ்ட்ரால். இதில் இரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால் தான், அது உயர் கொலஸ்ட்ரால் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் இந்த வகையான கொலஸ்ட்ரால் தமனிகளின் சுவர்களில் படிந்து தேங்க ஆரம்பிக்கின்றன. ஒருவரது இரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால், அது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும். அதோடு ஒருவரது உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால், அது குறிப்பிட்ட அறிகுறிகளை வெளிக்காட்டும். அந்த அறிகுறிகளை கூர்மையாக கவனித்து, வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை சரியான நேரத்தில் செய்வதன்…

Read More

ஹட்டன், தலவாக்கலை பிரதேசத்தில் இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்ட 13 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே கும்பத்தை சேர்ந்த 13 பேரே இவ்வாறு கோவிட் தொற்றுக்குள்ளானதாக கொட்டகல சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவரின் சடலத்தை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு முன்னர் உறவினர்கள் சடலத்தை கட்டிபிடித்து அழுது சோகத்தை வெளிப்படுத்தியுள்ளனர். எனினும் சடலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதன் பின்னரே அவர் கோவிட் தொற்றுக்குள்ளாகியிருந்தார் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Read More

கோவிட் வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக ‘சினோபார்ம்’ தடுப்பூசிகளை ஏற்றுவதில் யாழ்ப்பாணம் மாவட்ட மக்கள் காட்டிய ஆர்வத்தை வரவேற்கின்றோம். முதல் கட்டமாக 50 ஆயிரம் தடுப்பூசிகள்தான் யாழ். மாவட்ட மக்களுக்கு வழங்கப்பட்டன. மூன்று நாள்களில் அவை நிறைவடைந்துள்ளன என இராணுவத் தளபதியும் கோவிட் கட்டுப்பாட்டுச் செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இராணுவத்தினர் உள்ளிட்ட கோவிட் தடுப்புச் செயலணியினர் மற்றும் சுகாதாரப் பிரிவினர் ஆகியோருக்கு ஒத்துழைப்புக்களை வழங்கி முதல் கட்ட தடுப்பூசிகளை யாழ்.மாவட்ட மக்கள் பெற்றுள்ளனர். தெரிவு செய்யப்பட்ட கிராம அலுவலர் பிரிவுகள் ஊடாகத்தான் தடுப்பூசி ஏற்றும் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆனால், அந்தக் கிராம அலுவலர் பிரிவுகளைச் சாராதவர்களும் தடுப்பூசி ஏற்றிக் கொண்டுள்ளனர். இதனால் ஒதுக்கப்பட்ட தடுப்பூசிகள் விரைவாக முடிவடைந்துள்ளன. இரண்டாம் கட்டத் தடுப்பூசிகள் விரைவில் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு அனுப்பிவைக்கப்படும். அதேவேளை, வடக்கிலுள்ள ஏனைய மாவட்டங்களிலும் தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் முன்னெடுக்கப்படும்” – என்றார்.

Read More

வவுனியாவில் சுகாதார அறிவுறுத்தல்களை மீறி திருமண நிகழ்வு ஒன்று இடம்பெற்றமையால் திருமண மண்டபம் சுகாதாரப் பிரிவினரால் இன்று மாலை (04.06) சீல் வைத்து மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது. m வவுனியாவில் அமைந்துள்ள திருமண மண்டபம் ஒன்றில் மன்னாரைச் சேர்ந்த இளைஞன் ஒருவருக்கும், வவுனியாவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இதன்போது சுகாதார அறிவுறுத்தல்களை மீறி அதிகளவிலான உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டதுடன், சுகாதார அறிவுறுத்தல்களும் பின்பற்றப்படவில்லை. இந்நிலையில் அங்கு சென்ற சுகாதாரப் பிரிவினர் அங்கு கூடியிருந்தவர்களை கடும் எச்சரிக்கை வழங்கி அங்கிருந்து வெளியேற்றியதுடன், திருமண வீட்டாருக்கும் கடும் எச்சரிக்கை வழங்கினர்.> சுகாதார அறிவுறத்தல்களை மீறி மண்டபத்தை வழங்கி மக்களை ஒன்று கூட்டியமை தொடர்பில் திருமண மண்டபம் சுகாதாரப பரிவினரால் சீல் வைக்கப்பட்டு மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது.

Read More

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு இட நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை பதில் பணிப்பாளர், மருத்துவர் ச.ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்துள்ளார். அதனால் தற்போது இரண்டு கோவிட்-19 சிகிச்சை விடுதிகள் காணப்படும் நிலையில் மேதிகமாக மூன்றாவது விடுதியில் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது; யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக இரண்டு விடுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அந்த விடுதிகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதனால் 10 படுக்கைகளைக் கொண்ட புதிய விடுதி அவசர சிகிச்சை பிரிவுடன் அமைக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளவேண்டும்- என்றார்

Read More