Author: karihaalan

அனைத்து வகையான லன்ச் ஷீட்களையும் (உணவுப் பொதியிடும் பொலிதீன் தாள்கள்) தடை செய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொளளுமாறு சுற்றாடல் துறை அமைச்சு அதிகாரிகளுக்கு சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர உத்தரவிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2015 ஆம் ஆண்டில் சுற்றாடல் அமைச்சராக பதவி வகித்தபோது, லன்ச் ஷீட்களை தடை செய்வற்கு நடவக்கை மேற்கொண்ட போதிலும், அத்தீர்மானம் முறையாக அமுல்படுத்தப்படவில்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் நாளாந்தம் 10 மில்லியனுக்கும் (ஒரு கோடி) அதிகமான லன்ச் ஷீட்களை; பயன்படுத்த சூழலில் வெளிவிடப்படுவதாக சுற்றாடல் அமைச்சு விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லன்ச் ஷீட்கள் 2 அல்லது 3 வருடங்களில் மண்ணில் உக்குகின்ற போதிலும். அவற்றிலிருந்து திரட்டப்படும் நுண் பிளாஸ்திக் துகள்கள் 200 வருடங்களுக்கு மேலாக நீடித்திருக்கும் என விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். லன்ச் ஷீட்களை தடை செய்வதற்கு ஏற்கெனவே சுற்றாடல் அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில் புதிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிடாமலேயே உத்தரவொன்றை…

Read More

நாளை புதன்கிழமை இரவு 10.00 மணி முதல் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை 30 மணித்தியாலங்களுக்கு மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இன்று (22) கூறினார். கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் மே 21 அரசாங்கம் விதித்த கட்டுப்பாடுகள் ஜூன் 21 அன்று அதிகாலை 4.00 மணிக்கு தளர்த்தப்பட்டது. மேலும் இந்த தளர்வு தொடர்ந்து மூன்று நாட்கள் நீடிக்கப்பட்டு, மீண்டும் 23ஆம் திகதி இரவு பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்படவுள்ளது. மேலும் இந்த மூன்று நாட்கள் பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டிருந்தாலும், மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்படவில்லை. அத்தோடு வருகின்ற பொசன் விழாவின் காரணமாக மக்கள் கூடுவதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி கூறினார்.

Read More

சம்மாந்துறை பொலிஸ் பிரிவு மற்றும் சம்மாந்துறை பிரதேச செயலக நிர்வாகத்தின் கீழுள்ள சம்மாந்துறை உடங்கா 02, 14ஆம் வீதியை சேர்ந்த 34 வயதை உடைய அப்துல் றஹீம் சியாத் என்பவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்றுக் காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மரணத்துக்கான காரணம் மற்றும் மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

வுனியாவில் பயணத் தடை விதிக்கப்பட்ட கிராமத்தில் இருந்து வெளியேறிச் சென்ற குடும்பம் ஒன்றின் வீடு சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். கொவிட் தாக்கம் அதிகரிப்பு காரணமாக வவுனியா, சகாயாமாதா புரம் மற்றும் அதனை அண்டிய சூசைப்பிள்ளையார் குளத்தின் ஒரு பகுதி என்பன இராணுவத்தினரதும், பொலிசாரினதும் பாதுகாப்பு போடப்பட்டு முழுமையாக கிராமத்தில் இருந்து எவரும் வெளியேறிச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சூசைப்பிள்ளையார்குளம், வைரவ கோவிலடிப் பகுதியில் உள்ள குடும்பம் ஒன்று சுகாதாரப் பிரிவினர் மற்றும் பொலிசார் ஆகியோரின் அனுமதியைப் பெறாது பயணத்தடை விதிக்கப்பட்ட கிராமத்தில் இருந்து வெளியேறி வெளியிடத்திற்கு சென்றுள்ளனர். இது தொடர்பில் சுகாதாரப் பிரிவினருக்கும், பொலிசாருக்கும் கிடைத்த முறைப்பாட்டை அடுத்து குறித்த வீடு சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டது. அத்துடன், குறித்த வீட்டில் வசித்து வந்த குடும்பத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Read More

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி வதிரி பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்த நிலையில், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு இளம் குடும்பஸ்தர்கள், வதிரி அமெரிக்க மிசன் பாடசாலைக்கு அருகிலுள்ள ஐமூலை வளைவில் நிதானமிழந்து, மின் கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளாகினர். சம்பவத்தில் வீரவாகுப்பிள்ளை கெங்கேஸ்வரன் (33) என்பவரே உயிரிழந்துள்ளார். கண்டியை சேர்ந்த இவர், தற்போது வடமராட்சி, திக்கத்தில் திருமணம் செய்து வாழ்ந்துவருகின்றார். அத்துடன் அவருடன் பயணித்த திக்கத்தை சேர்ந்த மற்றொரு இளம் குடும்பஸ்தர் படுகாயமடைந்த நிலையில், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளிற்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். மேலும் உயிரிழந்தவரின் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பிசிஆர் சோதனை முடிவின் பின்னர், உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Read More

கொலஸ்ட்ரால் என்பது முற்றிலும் மோசமானது அல்ல. இது கல்லீரலால் உற்பத்தி செய்யப்படும் ஒரு மெழுகு, கொழுப்பு போன்ற பொருள். இது சில முக்கியமான உடல் செயல்பாடுகளில் முக்கிய பங்கை வகிக்கிறது. இத்தகைய கொலஸ்ட்ரால் செல் சவ்வுகள், குறிப்பிட்ட ஹார்மோன்கள் மற்றும் வைட்டமின் டி உருவாக்கத்திற்கு உதவுகிறது. இந்த கொலஸ்ட்ராலில் இரண்டு வகைகள் உள்ளன. அவை HDL என்னும் நல்ல கொலஸ்ட்ரால் மற்றும் LDL என்னும் கெட்ட கொலஸ்ட்ரால். இதில் இரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால் தான், அது உயர் கொலஸ்ட்ரால் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் இந்த வகையான கொலஸ்ட்ரால் தமனிகளின் சுவர்களில் படிந்து தேங்க ஆரம்பிக்கின்றன. ஒருவரது இரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால், அது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும். அதோடு ஒருவரது உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால், அது குறிப்பிட்ட அறிகுறிகளை வெளிக்காட்டும். அந்த அறிகுறிகளை கூர்மையாக கவனித்து, வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை சரியான நேரத்தில் செய்வதன்…

Read More

மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சிலரால் மனக்கலக்கங்கள் வந்து போகும். கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். யாரிடமும் அதிக உரிமை எடுத்துக் கொள்ளவேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர் களை கடிந்து கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள். ரிஷபம்: பிள்ளைகள் குடும்ப சூழ்நிலைக்கு தகுந்தார் போல் நடந்து கொள்வார்கள். தாய்வழி உறவினர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். புதிய நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது ஒப்பந் தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். மகிழ்ச்சியான நாள். மிதுனம்: மற்றவர்களை நம்பி இருக்காமல் தன் முயற்சியால் என்ன முடிகிறதோ அதை செய்து முன்னேற நினைப்பீர்கள். உறவினர்கள் நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரம் தழைக்கும். உத்தியோகத்தில் சில புதுமைகளை செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். தொட்டது துலங்கும் நாள். கடகம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு…

Read More

இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டமை தொடர்பில் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். உயிரிழந்த டிப்பர் சாரதிக்கும் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிளுக்கும் இடையில் சிறிது நாட்களுக்கு முன்னர் தகராறு காணப்பட்டது. இந்நிலையில் இராஜாங்க அமைச்சரின் வீட்டின் முன்பாக பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள், அவ்வழியாக மணல் ஏற்றிச் சென்ற குறித்த டிப்பர் சாரதியின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்ற போது இராஜாங்க அமைச்சர் அவரது வீட்டில் இருக்கவில்லை என தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருணாவின் கட்சியின் முக்கியஸ்தராக செயற்பட்ட கமலதாஸ் தனது முகநுால் பக்கத்தில், ஆட்டோவில் வந்தவர் குடிவெறியோ, இல்லையோ…கொலைவெறியுடன் வந்தார் என்று எப்படி முடிவு செய்தார்கள்? பொறுப்புணர்வு வேண்டாமா?? ஏற்கனவே பொலீஸ்மீது மக்கள் காண்ட்டாக இருக்கிறாங்க… ஏறாவூரில் முட்டுக்காலில் நிறுத்தியவர்களுக்கு உடனடி…

Read More

இலங்கை அரசாங்கம் கடந்த 18ஆம் திகதியுடன் நிறைவடைந்த ஒருவாரத்திற்குள் 22 பில்லியன் ரூபா பணம் அச்சிட்டிருப்பதாக இக்கொனொமிக்ஸ்ட் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட 50 பில்லியன் ரூபாவை திரட்டுவதற்கான பிணைமுறிகளில் 60 சதவீதத்தையாகிலும் எவரும் கொள்வனவு செய்யவில்லை. அதன் காரணமாக குறைந்துள்ள நிதியை ஈடுசெய்வதற்காக அரசாங்கம் பணம் அச்சிட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தத் தொகையை அரசாங்கம் அச்சிடவிருந்தது. இருப்பினும் 400 மில்லியன் டொலர்களை சீன அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு வழங்கியிருந்த காரணத்தினால் அப்போது அச்சிடுவதை இலங்கை தவிர்த்துக் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

Read More

திருகோணமலை மாவட்டத்தில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசி ஏற்றும் முதலாவது நிகழ்வு நேற்று (21) கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எச்.எம்.றிஸ்வி தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த நிகழ்வில், திருகோணமலை பிராந்திய தாய்,சேய் நல வைத்திய அதிகாரி டொக்டர் எச்.எம். சமீம் கிண்ணியா தள வைத்தியசாலை மகப்பேற்று நிபுணர் குன்சிறி குணதிலக்க கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி ஆகியோர் கலந்து கொண்டனர். இதன்போது திருகோணமலை பிராந்திய தாய், சேய் நல வைத்திய அதிகாரி கருத்து தெரிவிக்கையில்,திருகோணமலை மாவட்டத்தில் ஆகக் கூடுதலாக கர்ப்பிணித் தாய்மார்கள் கொரோனா தொற்றினால், பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த பாதிப்பில் கிண்ணியா சுகாதாரப் பிரிவும் உள்ளடங்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக கர்ப்பிணி தாய்மார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் இங்கிருந்து ஆரம்பித்து வைக்கப்படுகின்றது. திருகோணமலை மாவட்டத்தில் 1,400 கர்ப்பிணி தாய்மார்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. இதில் கிண்ணியா சுகாதாரப் பிரிவில் 250 கர்ப்பிணி தாய்மார்கள்…

Read More