Author: thileep Editor

கல்முனை – மட்டக்களப்பு பிரதான வீதிக்கு அருகாமையிலுள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் இன்று காலை புகுந்த முதலையினால், அப்பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டது. பிரதேச மக்கள் அறிவித்ததனைத் தொடர்ந்து வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குறித்த பகுதிக்கு சென்று முதலையினை மீட்டுள்ளதுடன், உன்னிச்சை காட்டுப்பகுதியில் உள்ள குளத்தில் விடுவித்துள்ளனர்.

Read More

தமிழகத்தில் கோவை காந்தி மாநகர் அருகே மனைவியை கிரிக்கெட் மட்டையால், கணவன் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. இலங்கையின், யாழ்ப்பாணத்திலிருந்து அகதியாக சென்ற நபரே இந்த கொலையை புரிந்தார். அவர் தலைமறைவாகி விட்டார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது, கோவை காந்தி மாநகர் பகுதியைச் சேர்ந்தவர் கவிதா (32). ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்துவந்தார். இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி ஒரு மகன் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக கவிதா கணவரைப் பிரிந்து வாழ்ந்துவந்தார். 12 ஆண்டுகளுக்கு முன்பு குமார் என்கிற லவேந்திரன் (49) என்பவரை கவிதா இரண்டாவது திருமணம் செய்திருக்கிறார். லவேந்திரன் இலங்கைத் தமிழர். இவர் கோவையில் பழைய கட்டடங்களை உடைக்கும் பணி செய்துவருகிறார். இந்தத் தம்பதிக்கும் ஓர் குழந்தை உள்ளது. இந்தநிலையில், கவிதா அடிக்கடி போன் பேசுவதால், லவேந்திரன் ஆத்திரமடைந்து அவ்வபோது சத்தம் போட்டு வந்திருக்கிறார். இதனால், இருவருக்குமிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்படுவது வழக்கம். நேற்று முன்தினம்…

Read More

தென்னிலங்கையில் போதைப்பொருளால் சீரழியும் இளைஞர்கள் தொடர்பிலான காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. இதன்போது தென்னிலங்கை இளைஞர் ஒருவர் ஐஸ்போதைப்பொருள் பாவித்த நிலையில், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள்ளார். இந்நிலையில் சிவில் உடையில் சென்ற பொலிசார் இளைஞரின் கைகளில் விலங்குமாட்டிய நிலையில் தெருவோரம் வாந்தி எடுக்கின்றார். இலங்கையின் வளரும் இளம் சமூகத்தினர் இவ்வாறு சீரழிந்துபோது தொடர்பில் பலரும் விசனங்களை முன்வைத்துள்ளனர்.

Read More

நலமாக வாழ இயற்கையாக கிடைக்கும் காய் கறிகளையும் பழங்களையும் உண்டு வாழ்ந்தாலே போதும். ஆனால் நடைமுறை வாழ்வில் தற்போது அனுபவித்து வரும் செயற்கையான வாழ்க்கையால் அவதி படுவதுதான் மிச்சம். உடல் எடையை குறைப்பதில் நாம் தினமும் வீட்டில் பயன்படுத்தப்படும் பூண்டு எந்த அளவிற்கு உதவி செய்கிறது தெரியுமா ? இந்த கீழ்வரும் செய்முறையின் அடிப்படையில் பூண்டில் கஞ்சி செய்து தினமும் குடித்துவர, உடல் எடை மிக வேகமாகக் குறைய ஆரம்பிக்கும். தேவையான பொருள்கள்: பூண்டு – 15 பல் (தோல் நீக்கப்பட்டது) புழுங்கல் அரிசி – ஒரு கப் (வறுத்து, உடைத்தது) சீரகம், மிளகு – தலா கால் டீஸ்பூன் (உடைத்தது) வெந்தயக்கீரை – ஒரு கைப்பிடி அளவு இந்துப்பு – தேவையான அளவு மோர் – ஒரு கப் தண்ணீர் – 4 கப் செய்முறை: உடைத்த புழுங்கல் அரிசி, பூண்டு, மிளகு, சீரகம், இந்துப்பு, வெந்தயக்கீரை, தண்ணீர் ஆகியவற்றை…

Read More

அழகை விரும்பாத மனிதர்களே இருக்க முடியாது. அழகான முகத்தை பெற இன்றைக்கு பல விதமான ரசாயனக் கலவைகளை முகத்தில் பூசுகின்றனர். சிலர் அழகு நிலையங்களை நோக்கி படையெடுக்கின்றனர். முகத்தையும், சருமத்தையும் பேணி பாதுகாக்க இயற்கை மூலிகைகள் நம்மிடையே நிறைந்து கிடக்கின்றன. பல வாசனை சோப்புகளாலும், பவுடர்களாலும் உடலில் ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்பட்டு சருமம் பாதிக்கப்படுகிறது. இதனால் 30 வயதிலேயே முகச் சுருக்கம், தோல் சுருக்கம் ஏற்படுகிறது. மேலும் அன்றாடம் உண்ணும் உணவில் சத்துக்கள் இல்லாததாலும், சரியாக நீர் அருந்தாததாலும், சருமம் வறட்சியடைகின்றது. சரும பாதிப்புக்களுக்கு இயற்கை மூலிகைகளைக் கொண்ட குளியல் பொடிகளை உபயோகப்படுத்தினால் சருமம் பளபளப்பதுடன் பாதுகாப்பும் கிடைக்கிறது. குளியல்பொடி தயாரிக்க: மூலிகை பொருட்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் சோம்பு 100 கிராம், கஸ்தூரி மஞ்சள் 100 கிராம், வெட்டி வேர் 200 கிராம், அகில் கட்டை 200 கிராம், சந்தனத் தூள் 300 கிராம், கார்போக அரிசி 200…

Read More

மிளகு விஷத்தை முறிப்பதாகவும், வாதத்தை அடக்குவதாகவும், நரம்பு மண்டலத்திற்கு புத்துணர்ச்சி தருவதாகவும், இரத்தத்தை சுத்திகரிப்பதாகவும், உடல் உஷ்ணத்தை தருவதாகவும் இருக்கிறது. திரிகடுகு சூரணம் சுவாசம் தொடர்பான பிரச்சனைகளுக்கும், ஜீரண பிரச்சனைகளுக்கும் நல்ல மருந்தாக இருக்கிறது. * கல்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின், தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் உள்ளன. * மிளகு சித்த மருத்துவ முறைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. சளி, கோழை, இருமல் நீக்குவதற்கும் நச்சு முறிவு மருந்தாகவும் மிளகு பயன்படுகிறது. * மிளகு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றி உடலுக்கு வெப்பத்தைத் தருவதோடு வீக்கத்தைக் கரைக்கும் தன்மையும் உடையது. உடலில் உண்டாகும் காய்ச்சலைப் போக்கும் தன்மை உடையது. இது காரமும் மணமும் உடையது. உணவைச் செரிக்க வைப்பது. உணவில் உள்ள நச்சுத் தன்மையைப் போக்க வல்லது. * சாதாரண காய்ச்சலுக்கு மிளகு கசாயம் நல்ல மருந்தா இருக்கும்; சளி இருமல் இருந்தா மிளகு கசாயத்தோட…

Read More

மேஷம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பர். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள். ரிஷபம்: சந்திராஷ்டமம் இருப்பதால் இனந்தெரியாத சின்னச் சின்ன கவலைகள் வந்து போகும். நண்பர்கள் உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்து கொள்வார்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க அதிகம் உழைக்கவேண்டி வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் அளவாக பழகுங்கள். கவனமுடன் இருக்க வேண்டிய நாள். மிதுனம்: பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். அதிர்ஷ்டம் பெருகும் நாள். கடகம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். விருந்தினர் வருகையால் வீடு, களைக்கட்டும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை…

Read More

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் எந்தவொரு பிரிவிலும் சித்திபெற்ற மாணவர்களை தாதிய சேவைக்குள் உள்வாங்க சுகாதார அமைச்சு கவனம் செலுத்தி வருகிறது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் குறித்த மாணவர்களை உள்வாங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.தாதிய சேவையில் நிலவும் வெற்றிடங்களின் காரணமாக மருத்துவ சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் மட்டுமல்லாது கொழும்பு மாவட்டத்திலுள்ள மருத்துவமனைகளிலும் தாதியர்கள் பற்றாக்குறை அதிகளவில் நிலவுகிறது. வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் மற்றும் கொழும்பு மாவட்டத்திலுமுள்ள மருத்துவமனைகளில் சேவையாற்றுவதற்கு தாதியர்கள் குறைந்தளவான முக்கியத்துவத்தை வழங்குவதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

Read More

இலங்கை கணக்காளர் சேவையில் தரம் மூன்றிற்கு ஆட்களை சேர்த்துக் கொள்வதற்கான வரையறுக்கப்பட்ட பகிரங்கப் போட்டிப் பரீட்சை இம்மாதம் 27 ஆம், 28ஆம் திகதிகளிலும், பெப்ரவரி 3 ஆம் திகதியும் மீண்டும் நடைபெறவுள்ளது. கொழும்பில் 51 பரீட்சை மத்திய நிலையங்களிலும், யாழ்ப்பாணத்தில் 6 பரீட்சை மத்திய நிலையங்களிலும் இந்த பரீட்சைகள் நடைபெறவிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். இந்த பரீட்சை 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22 ஆம், 23ஆம் மற்றும் 29 ஆம் திகதிகளில் நடத்தப்பட இருந்தமை குறிப்பிடத்தக்கது.இந்த பரீட்சைகளுக்கு எட்டாயிரத்து 37 பேர் தோற்றவுள்ளனர் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித மேலும் தெரிவித்தார்..

Read More

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்கும் ஜப்பான் MI என்ற நிறுவனத்திற்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைவாக இலங்கை பெண்களுக்கு ஜப்பானில் தொழில் வாய்ப்புக்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதற்கமைவாக ஜப்பான் மொழி தேர்ச்சியில் N4 தரத்துடன் அல்லது கல்வியை தொடர்ந்த 18 க்கும் 30 வயதிற்கும் இடைப்பட்ட யுவதிகள் இதற்காக விண்ணப்பிக்க முடியும். பாராமரிப்பு Caregiver பணிப்பெண் சேவையில் 100ற்கும் மேற்பட்ட தொழில் வாய்ப்புகான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. இவர்களுக்கு மாதாந்தம் ஒரு இலட்சதது 35ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விற்பனை பிரிவுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று வெளிநாட்டு வேலைவாய்பப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான மேலதிக விபரங்கள் பணியகத்தின் இணையத்தளத்தில் இடம் பெற்றுள்ளன. 011 27 91 814 என்ற அலுவலக தொலைபேசி இலக்கத்தடன் தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை பெற்றுகொள்ள முடியும் என்று வெளிநாட்டு பணியகம் அறிவித்துள்ளது.

Read More